மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த ஜோடியை காண சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா தம்பதி! வைரல் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா சமீபத்தில் இவர் விக்ரம் படத்தில் நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வரலாற்று கதை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .
இந்நிலையில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்கள் என அதற்கு தலைப்பிட்டு இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவற்றைப் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் நீங்கள் இருவரும் இணைந்து விரைவிலேயே ஒரு படம் பண்ண வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர் .
நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா கேரளா சென்று நடிகர் பிரித்திவிராஜின் குடும்பத்தை அவர்களது இல்லம் சென்று சந்தித்திருக்கின்றனர். இதனைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிந்துள்ள சூர்யா 'ஒரு இனிமையான சந்திப்பு இது போன்ற சந்திப்புகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அழகான நேரங்கள்' என குறிப்பிட்டு இருக்கிறார். பிரித்திவிராஜ் ஜோதிகாவும் இணைந்து நடித்த மொழி என்ற திரைப்படம் அவர்கள் இருவரது கேரியரிலும் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வரும் ரசிகர்கள் இவர்களிருவரும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 திரைப்படத்தில் பிரித்விராஜ் நடிக்கயிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. மேலும் இந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரமும் இடம்பெறலாம் என படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.