மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே ஜாலி தான் போல.! பனிமலையில் சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோதிகா.!?
தமிழ் திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஜோதிகாவின் நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜோதிகா, தன்னுடன் நடித்த சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது மீண்டும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படம் காதல் தி கோர். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் ஜோதிகா.
மேலும் இந்தியில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் கதாநாயகர்களாக நடித்து வெளியாகவிருக்கும் 'சைத்தான்' திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே தன் கணவருடன் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தற்போது பின்லாந்தில் பனிமலையில் கணவருடன் ரொமான்சாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.