மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயலான் படக்குழுவினரை புகழ்ந்து தள்ளிய சூர்யா.. வைரல் பதிவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மற்றும் துறை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா அய்லான் திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "விஎப்எக்ஸ் குழுவினரின் பணியை பார்த்து வியந்தேன். உங்கள் பணியின் மீதான காதலை இது காட்டுகிறது. பிரமாதமான அவுட்புட். அனைவருடைய இதயங்களையும் கவர்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.