மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..இப்படியொரு ரசிகரா!! சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் புகைப்படம்!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் குறைந்த செலவில் ஏழை,எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்யவேண்டுமென்பதற்காக விமான நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டுமென்ற லட்சியத்துடன் முயற்சிப்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
• Our Karnataka @Suriya_offl Fans Club Member Karthi Has been Blessed With a Baby Boy & He Named His Son "#Maara" ♥️😍
— Suriya Fans Club™ (@SuriyaFansClub) November 21, 2020
Welcome To The World Little One #Maara 🤗 Wishing You All Happiness! @Suriya_offl | @rajsekarpandian | #SooraraiPottru #Suriya #SooraraiPottruOnPrime pic.twitter.com/3unl92oJ0w
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயர் நெடுமாறன் ராஜாங்கம். அதனை சுருக்கமாக படத்தில் மாறா என அழைப்பர். இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் சூர்யாவின் மீதான தனது பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது ஆண் குழந்தைக்கு மாறா என்று பெயரிட்டு மகிழ்ந்துள்ளார். இதனை சூர்யா ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.