மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது ரசிகரின் மனைவியின் ஆசைக்காக சூர்யா செய்த காரியம்.! நெகிழ்ந்து வாழ்த்தும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் கைவசம் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளன. சூர்யா நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார்.
மேலும் நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் ரசிகர் மன்ற செயலாளர் மனோஜ் என்பவரின் மனைவி தீபிகா. சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் அவர் மேற்படிப்பிற்காக அயர்லாந்து செல்ல ஆசைப்பட்டுள்ளார். இதனை அறிந்த சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் அவர் அயர்லாந்து சென்று படிக்க உதவியுள்ளார்.
தொடர்ந்து தொலைபேசி மூலம் தீபிகாவுக்கு வாழ்த்து கூறிய அவர், குடும்ப சந்தோசம் முக்கியம், அதனைப் போல படிப்பு, தொழிலும் முக்கியம். நன்றாக படித்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்து கூறியுள்ளாராம். இந்த ஆடியோ உரையாடல் வைரலாகி வருகிறது.