#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெய் பீம் படத்தில் நான் செய்த பெரிய தப்பு இதுதான்.! வருத்தத்துடன் நடிகர் சூர்யா பகிர்ந்த உண்மை!!
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சிவா இயக்கத்தில் உருவான இப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அதற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ளார்
கடந்த 2021 ஆம் ஆண்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இருளர் இன மக்களுக்கு நடந்த அநீதி குறித்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த படம் மக்களிடையே நல்ல அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அந்த படம் வெளியான ஓரிரு நாட்களில் அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் அண்ணாத்த படம் பார்ப்பதற்காக சூர்யா தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு முதியவர் ஒருவர் ஜெய்பீம் படத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அவரிடம் சென்று படம் தியேட்டரில் ரிலீஸாகவில்லை. ஓடிடியில் பாருங்கள் என சூர்யா கூறினாராம். ஆனால் அவருக்கு ஓடிடி குறித்து எதுவும் புரியவில்லையாம். அப்போதுதான் ஜெய்பீம் திரைப்படத்தை ஓடிடி யில் வெளியிட்டது தவறு. படம் சேர வேண்டிய பார்வையாளர்களை அடையவில்லையே என தான் வருத்தப்பட்டதாக சூர்யா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
இதையும் படிங்க: கடைசி 10 நிமிஷம் என் இதயத்தையே நிறுத்திட்டாங்க.! மெய்சிலிர்ந்த நடிகை ஜோதிகா!! ஏன் தெரியுமா??