மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரெக்கமண்டேஷனில் ஜெயிச்சியா மாறா?.. சர்ச்சையில் சிக்கிய "சூரரைப்போற்று" நாயகன்..! ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி..!!
இந்திய சினிமாவின் பெருமைமிக்க விருதுகளில் ஒன்றுதான் தேசிய திரைப்பட விருதுகள். அண்மையில் இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களுக்காக மத்திய அரசு தேசியவிருதுகளை அறிவித்தது. அதில் இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது "சூரரை போற்று" படத்தில் நடித்த சூர்யா மற்றும் பாலிவுட் ஹீரோ அஜய் தேவகன் இருவருக்கும் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் சூர்யா தயாரித்து நடித்த "சூரரைப் போற்று" படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த திரைக்கதை என்று மொத்தமாக 5 விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தமிழ் திரைப்படம் இந்திய அளவில் இத்தகைய உயரிய விருதுகளை பெற்றது தமிழ் திரையுலகை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சர்ச்சைகளும் எழத் தொடங்கியது. தேசிய விருது கமிட்டியில் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாகவே அவரது சிபாரிசின் பெயரில் "சூரரைப் போற்று" திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர் விருதை தேர்ந்தெடுக்கவில்லை.
சூர்யா படத்தையும் அவரே சிபாரிசு செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என தெளிவாக தெரியாத நிலையில் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.