#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உண்மையிலே செம ஜோடிதாங்க! பீச்சில் கூல் செல்பி! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கியூட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோதிகாவும் ரஜினி, கமல், அஜித் விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கசக்கமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சூர்யா, ஜோதிகா இருவருமே திருமணத்திற்கு முன்பு ஒன்றாக ஜோடி சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், உயிரிலே கலந்தது, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கடற்கரையில் ஹாயாக வாக்கிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது இருவரும் பீச்சில் செம க்யூட்டாக எடுத்த லேட்டஸ்ட் செல்பி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.