#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டென்னிஸ் வீரரை தோற்கடித்த சூர்யா.! இவருக்குள் இப்படியொரு திறமையா..
1997ம் ஆண்டு "நேருக்கு நேர்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து இவர் நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, 24, அயன், ஆதவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள் என பல விருதுகளை வென்றுள்ள சூர்யா, தன்னுடன் நடித்த சக நடிகையான ஜோதிகாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஒரு மகளும் , ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் 36 வயதினிலே, ராட்சசி போன்ற பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யா ஒரு டென்னிஸ் வீரருடன் விளையாடி அவரை தோற்கடித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சூர்யா நடிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் சிறந்தவர் தான் என்று கூறி வருகின்றனர்.
First Time Seeing This👀@Suriya_offl 🤨🔥pic.twitter.com/9bY2Dj0k5t
— Rocky Bhai (@RockybhaiOffcl) September 20, 2023