மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சூர்யாவிற்கு குவிந்த லவ் லெட்டர்ஸ்! என்னவெல்லாம் சொல்லிருக்காங்க! சீக்ரெட்டை உடைத்த தங்கை பிருந்தா!!
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. அவர் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமின்றி, சமூக நலன் கொண்ட கருத்துக்களை கூறும் வகையிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் இருளர் இனமக்களின் சிரமங்களை வெளிப்படுத்தும் வகையில் நடித்த ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அவர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக வில்லனாக நடித்திருந்தார். அவரை ரசிகர்கள் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாலாவுடன் கூட்டணியில் இணைந்து தனது 41-வது படத்தில் நடிக்கிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த அவரது தங்கை பிருந்தா, தனது அண்ணன் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் வெளியான போது நான் காலேஜ் முதல் ஆண்டு படித்து வந்தேன். அப்பொழுது அண்ணாவோட ஃபேன்ஸ் நிறைய லெட்டர்ஸ் வீட்டிற்கு அனுப்புவாங்க. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து எல்லாம் லெட்டர்ஸ், மெயில் வரும்.
நிறைய லவ் லெட்டர்ஸ்தான் அண்ணனுக்கு வரும். எனக்கும் கடிதங்கள் வந்தது. நான் உனக்கு நல்ல அண்ணியா இருப்பேன். உன்னை நல்லா பாத்துக்குவேன். உங்க அண்ணா கிட்ட எடுத்து சொல்லு என கூறி மாடர்ன் டிரஸ், சேலை என வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அனுப்புவார்கள் என்று கூறியுள்ளார்.