மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர் சூர்யா.! வாடிவாசல் படத்திற்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி, தற்போது பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அண்மையில் கமல் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து மிரட்டியுள்ளார். மேலும் ராக்கெட்ரி படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். சூர்யா தற்போது ஹீரோவாக பாலா இயக்கத்தில் உருவாகிவரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் வாடிவாசல் படத்திற்காக ரூ. 28கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.