மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோ.வுக்காக அந்த நடிகையை கழட்டி விட்ட சூர்யா.?! நீண்ட நாளுக்கு பின் வெளியான சீக்ரெட்.!
கடந்த 2004 ஆம் வருடம் வெளியான எம். குமரன் சன். ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அசின் இவர் மலையாள பெண்ணாகவே இந்த திரைப்படத்தில் நடித்து, பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹீட் அடித்தது. மேலும் இதன் காரணமாக, அவருக்கு தமிழ் திரையுலகில் பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தன. தொடர்ச்சியாக கமல், விக்ரம், சூர்யா, அஜித், விஜய் என்று பல்வேறு முக்கிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அசின்.
தசாவதாரம், வேல், ஆழ்வார், போக்கிரி, சிவகாசி என பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சூர்யாவுடன் கஜினி திரைப்படத்தில் நடித்தது விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவருடைய நடிப்பு திறமைக்கு கஜினி திரைப்படம் மிகச்சிறந்த உதாரணமாக கருதப்பட்டது.
இதன் பிறகு பாலிவுட்டில் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு அசினுக்கு கிடைத்தது. இந்தியிலும் சல்மான் கான், அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதற்கு நடுவே கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை அவர் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். மேலும் இவருக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். ஆகவே அசின் தொடர்பாக சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு என்பவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.
அந்த பேட்டியில் முதலில் ஜோதிகா, சூர்யா ஆகியோர் நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு அசினிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த திரைப்படத்தில் 2 கதாநாயகிகள் உள்ளதாகவும், ஐஷு கேரக்டரில் அசின் நடிக்கிறார் என்றும் கூறியிருந்தனர்.
ஆனால், ஜோதிகா நடித்த குந்தவை கதாபாத்திரம் தனக்கு வேண்டும் என அசின் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, இந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்று பட குழுவினர் சூர்யாவிடம் தெளிவாகக் கூறிவிட்டனர்.
ஆனாலும் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் எனவும், வேறு எந்த கதாபாத்திரத்திலும் நான் நடிக்க மாட்டேன் என்று அசின் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, அந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்தபடியால், அசின் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை. இதன் பிறகு பூமிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூறியிருக்கிறார்.