திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இது நடந்திருக்கவே கூடாது.. பேசமுடியாமல் கண்கலங்கி நின்ற சூர்யா! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 46 வயது நிறைந்த அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல மொழியை சேர்ந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு உள்ளிட்டோர் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
.@suriya_offl broke down emotionally while paying homage to late actor #PuneethRajkumar. pic.twitter.com/p9p27Oqm3f
— Manobala Vijayabalan (@ManobalaV) November 5, 2021
இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு நேரில் சென்று கலங்கியவாறே அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது நடந்திருக்கக் கூடாது, அவரது மறைவை என்னால், என் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புனித் எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார். தற்போது அவர் மறைந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் சிரித்துக்கொண்டே இருக்கட்டும். அவரின் மறைவில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.