மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்த சீரியல் நடிகை தான் சூர்ய வம்சம் படத்தில் குழந்தையாக நடித்தாராம்!" யார் தெரியுமா.?
1997ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "சூர்ய வம்சம்". படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். மேலும் ராதிகா, தேவயானி, பிரியாராமன், சத்யப்ரியா, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த "ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" பாடலும் இன்று வரை பலரது விருப்பமான பாடலாக உள்ளது. மேலும் இந்தப் படத்தில் சரத் குமாரின் முறைப்பெண்ணை பிரியா ராமன் நடித்திருந்தார்.
இந்த ரோசாப்பூ பாடலில் சிறுவயது பிரியா ராமனாக நடித்த குழந்தை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பான "நீதானே என் பொன் வசந்தம்" தொடரில் நடித்த நிவாஷினி திவ்யா தான் சூர்ய வம்சம் படத்தில் சிறு வயது பிரியா ராமனாக நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவாஷினி, சூர்ய வம்சம் படத்தில் அவர் நடித்த காட்சிகளை இணைத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் "சூர்ய வம்சம் படத்தில் நடித்த குழந்தை இவர் தானா?" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.