மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கான முதல் தேர்வு சூர்யா இல்லை - வெளியான பரபரப்பு தகவல்..
கடந்த வருட தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற படம் விக்ரம் . உலக நாயகன் நடித்து தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்தத் திரைப்படத்தில் பகத் பசில் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில் நடிகர் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . ஐந்து நிமிடங்களுக்கு குறைவான காட்சிகளாக இருந்தாலும் மாஸாக இருந்தது அந்த காட்சிகள். அந்த கதாபாத்திரத்திற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது என்றால் அது மிகையாகாது
தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஒரு புதிய செய்தி பரவி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த செய்திகளின்படி ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கான முதல் தேர்வு நடிகர் சூர்யா இல்லையாம். முதலில் அந்த கதாபாத்திரத்திற்காக வேறொரு நடிகரிடம் தான் பேசி அவரை எப்படியாவது சம்மதிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். ஆனால் அந்த நடிகர் மறுத்து விடவே அதன் பிறகு நடிகர் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார்கள்.
தற்போது விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக நடிக்க இருந்தது சியான் விக்ரம் தான் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் சியான் விக்ரமை அனுகி அந்த கதாபாத்திரத்தில் அவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவர் மிகவும் குறைவான காட்சியாக இருக்கிறது என கூறி மறுத்துவிட்டாராம்.
அதன் பிறகு நடிகர் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார்கள் அவர் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரமானது மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகிவிட்டது.