மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் மகன் இறப்பதற்கு முன் நானும், அவனும் கடைசியாக இதைப்பற்றித்தான் பேசிக் கொண்டோம்..! சுஷாந்த் தந்தை கூறிய உருக்கமான வார்த்தைகள்..!
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தனது மகனுடனான கடைசி உரையாடல் குறித்து சுஷாந்தின் தந்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேசிய சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் சிறுவயதில் இருந்தே எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர், ஆனால் கடந்த சில வருடங்களாக அப்படி இல்லை, சுஷாந்த் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தபோது அங்கிதா என்ற பெண்ணை காதலித்து எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனக்கு தெரிந்து சுஷாந்தின் வாழ்க்கையில் வந்த ஒரே பெண் அவர் மட்டும்தான், ரியா சக்கரபோர்த்தியை சுஷாந்த் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என சுஷாந்தின் தந்தை கூறியுள்ளார்.
மேலும், சுஷாந்த் இறப்பதற்கு முன் கடைசியாக அவரது திருமணம் குறித்துதான் அவருடன் நான் பேசினேன். உனக்கு பிடித்த ஒரு பெண்ணையே திருமணம் செய்துகொள்ள என்றேன். ஆனால் இந்த கொரோனா சமயத்தில் எப்படி திருமணம் செய்துகொள்ளமுடியும், நடித்த படங்கள் எல்லாம் வெளியாகட்டும், அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்வதாக சுஷாந்த் கூறியதாக அவரது தந்தை கூறியுள்ளார்.