மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியானது நடிகர் சுஷாந்தின் கடைசிபட ட்ரைலர்! மறைந்தும் ரசிகர்களின் அன்பால் படைத்த பெரும் சாதனை! வீடியோ இதோ..
பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன இவரது தற்கொலை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து வெளியாக தயாராக இருந்த படம் “தில் பெச்சாரா”. கொரோனா ஊரடங்கால் இப்படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஜூலை 24 அன்று நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சஞ்சனா சங்கி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரைலர், வெளியாகி 24 மணிநேரம் முழுமையடையாத நிலையில் இதுவரை 2.2 கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.