மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சுஷாந்த் மரணம்! காதலி ரியாவின் சகோதரர் அதிரடி கைது! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!
பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் சுஷாந்த் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது காதலி ரியா மீது பலருக்கும் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டபட்ட நிலையில் வழக்கு விசாரணை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்தின் மரணத்தின் பின்னணியில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக தகவல்கள் தெரியவந்தன. அதனை தொடர்ந்து போதை மருந்து தடுப்புப்பிரிவினர்
ரியாவின் சகோதரர் செளவிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் மேனேஜர் சாமுவேல் மிரன்டா ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டு, 10 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர்களை கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போதை மருந்து தடுப்புப்பிரிவினர் கூறுகையில், கஞ்சா மற்றும் மரிஜுவானா வகை போதை மருந்துகளை அப்துல் பஸித் பரிஹார் என்ற போதை மருந்து விற்பவரிடம் செளவிக் வாங்கியுள்ளார். மேலும் அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தியுள்ளார் என கூறியுள்ளனர்.