பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
என் அப்பாவின் மரணம் கேம் இல்லை! ஆக்ரோஷத்தில் கத்திய அர்ச்சனா! பதிலடி கொடுத்து பாடகி சுசித்ரா போட்ட பதிவை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து சென்றுகொண்டுள்ளது. அதில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா மற்றும் கடந்த வாரம் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டிகள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் புதிய மனிதா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இருந்தனர். இதில் ரோபோ அணியினர்களிடமிருந்து கோபம், சிரிப்பு, அழுகை போன்ற உணர்வுகளை மனிதர்கள் அணி வரவழைக்க வேண்டும். இந்த நிலையில் டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் தனது அப்பாவை குறித்து பேசியதால் அர்ச்சனா ஆக்ரோஷம் அடைந்து அழுதுள்ளார். போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளரான சுசித்ரா, அர்ச்சனா இது போல தொந்தரவாக இருப்பது பிடிக்கவில்லை. அவருடைய தவறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா? அது எப்படி தவறாகிவிடும் ? என்று பதிவிட்டுள்ளார்