#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்ச்சை பேச்சுக்களால் எஸ்.வி சேகருக்கு கொலை மிரட்டல்; காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!
நடிகரும், அரசியல்கட்சி ஆதரவாளர் மற்றும் விமர்சகருமான எஸ்.வி சேகர், அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வழக்குகளில் சிக்கிக்கொள்வார்.
கடந்த 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது எஸ்.வி சேகர், சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாக தெரியவருகிறது.
இந்த விஷயத்தால் பதறிப்போன எஸ்.வி சேகர், இன்று பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.