#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவினை மோசமாக கிண்டல்செய்து அசிங்கப்படுத்திய பிரபல நடிகர்.! கொந்தளித்து போன ரசிகர்கள்!!
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த போட்டியில் 8 பிரபலங்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இவர்களுள் ஒருவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் மூன்று பெண்களுடன் காதல், பிளேபாய் என அவரது பெயர் சிக்கி சின்னாபின்னமானது.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது நண்பர்கள் வெற்றியடைய தான் விரும்புவதாகவும் கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இந்நிலையில் கவினுக்கு பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் கவினை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். என பதிவிட்டுள்ளார்.
#BiggBossTamil3 நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE.
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) September 4, 2019