நடிகர் தனுஷின் மகன் கேப்டனான அதே பள்ளியில் பிரபல நடிகரின் மகளும் கேப்டன்.! யாருன்னு பார்த்தீங்களா.!



Sve shear grand daughter also sports captain in danush son's school

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து தனிதனியாக இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், தனுஷின் மகன் யாத்ரா தனது பள்ளியின் விளையாட்டு அணி கேப்டனாக தேரந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கலந்துகொண்டு தனது மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் தனது பேத்தி ஆர்னா மற்றும் தனுஷின் மகன் யாத்ராவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், தனது பேத்தி ஆர்னா பள்ளி ஜூனியர் விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வினின் மகள் தான் இந்த ஆர்னா. அஸ்வின் சேகர் வேகம், நினைவில் நின்றவள், மணல் கயிறு 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.