மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவாகரத்து பற்றி பத்திரிக்கையாளர் பேட்டியில் மனம் திறந்த நடிகை சுவாதி ரெட்டி..
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஸ்வாதி ரெட்டி. இவர் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது தனது பெயரை ஸ்வாதி என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து தமிழில் "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் உள்ள ஸ்வாதி, படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே 2019ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து, திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்வாதி. இந்நிலையில், "மந்த் ஆப் மது" என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்வாதியிடம், "உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற தகவல் பரவி வருகிறது. அது உண்மையா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்வாதி, " தொழிலான சினிமாவைப் பற்றி ஏதேனும் கேள்வி கேளுங்கள். அதற்கு பதிலளிப்பேன். அது என் கடமையும் கூட. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்த கேள்விக்கும் என்னால் பதிலளிக்க முடியாது"