#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவிற்காக கோதாவில் தானே இறங்கிய டி ஆர்! அனல் பறக்கும் வேகத்தில் நடக்கும் பட வேலை!!!!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 'மாநாடு' திரைப்படத்தின் மூலம் ரீஎன்டரி கொடுத்தார் சிம்பு. அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சிம்பு, கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'பத்து தல' திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தத் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் இந்தத் திரைப்படத்தின் இரண்டு பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் இத்திரைப்படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.
இந்நிலையில் வருகின்ற 18ஆம் தேதி பத்து தல திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் என். கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
தற்போது சிம்பு விடுமுறைக்காக தாய்லாந்து சென்றுள்ளதால் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்புதான் அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தந்தை டி ராஜேந்தர் முன்னின்று செயல்படுத்தி வருகிறார். நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி வாங்குவதில் தொடங்கி எல்லா வேலைகளையும் டி ஆர், சிம்பு ரசிகர்களுடன் சேர்ந்து முன் நின்று நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.