திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"படவாய்ப்பு குறைந்தாலும் சொத்து மதிப்பு எகிறுது" தமன்னாவுக்கு இவ்ளோ சொத்து இருக்கா?!
தனது பதிமூன்றாவது வயதில் நடிக்க வந்த தமன்னா, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். 2005ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா.
இதையடுத்து தெலுங்கிலும் 2005ம் ஆண்டு வெளியான "ஸ்ரீ" படத்தில் அறிமுகமான இவர், தமிழில் 2006ம் ஆண்டு "கேடி" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 17 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் தமன்னா, ஒரு படத்திற்கு 5கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். மேலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட 50 லட்சம் முதல் 1கோடி வரை வாங்குவதாகவும், மேலும் பல விளம்பர படங்களில் நடித்துவரும் வரும் இவர், மாதம் 1கோடி சம்பாதிப்பதாக தெரிகிறது.
மேலும் மும்பையில் 20கோடியில் வீடும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் பல கோடி மதிப்புள்ள பிளாட்டும், BMW 320i, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, mitsubishi Pajero ஆகிய சொகுசு கார்களையும் வைத்துள்ள தமன்னா, 2கோடி மதிப்புள்ள வைர மோதிரம் என எல்லாம் சேர்த்து 120கோடிக்கு அதிபதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.