மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு! மனவருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட நடிகை தமன்னா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தெரிந்த நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜாகி வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும் எனது குழுவும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சரியானமுறையில் இருந்தபோதும் கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தேன். பின்னர் மருத்துவ வல்லுநர்களின் சிகிச்சையால் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன்.
அது மிகவும் கடினமான வாரம். தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் நலம்பெற நீங்கள் காட்டிய அன்பு, அரவணைப்பு அனைத்திற்கும் மிக்க நன்றி. பாதுகாப்பாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள் என கூறியுள்ளார்.