திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அஜித் கூப்பிட்டா அந்த இடத்திற்கு கூட செல்வேன்" நடிகை தமன்னா ஓபன் டாக்..
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் தமன்னா.
இது போன்ற நிலையில் தெலுங்கு நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
இதனை அடுத்து சமீபத்தில் தமன்னா ஒரு பேட்டியில் அஜித்துடன் நடித்த படத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா, "அஜித்துடன் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பு அடிக்கடி கேட்பேன். அஜித் படப்பிடிப்பின் போது இட்லி சமைத்து கொடுத்தார். அஜித் கூப்பிட்டால் பைக் ரைடு கூட செல்வேன்" என்று மனம் திறந்து பேசி இருந்தார்.