திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கவர்ச்சியாக நடனமாடினால் என்ன தவறு, உங்கள் பார்வை தான் தவறாக உள்ளது" ரசிகர்களை திட்டிய தமன்னா.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார் தமன்னா.
மேலும் தமிழில் முதன் முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரீஸில் நடித்த போது விஜய் வர்மா என்ற சக நடிகருடன் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று இணையத்தில் செய்திகளும் பரவி வருகிறது.
மேலும் பல வருடங்களாக தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்து வரும் தமன்னா தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். இதனை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். இப்பாடல் உலக அளவில் வெற்றி அடைந்தது.
இது போன்ற நிலையில் காவலா பாடல் வெளியான போது பல நெட்டிசன்கள் தமன்னாவின் கவர்ச்சியை விமர்சித்தனர். இதற்கு சமீபத்தில் பேட்டியில் பதிலளித்த தமன்னா, "கவர்ச்சியாக நடனம் ஆடினால் என்ன தவறு இருக்கிறது? ரசிகர்களின் பார்வையை தான் மாற்ற வேண்டும். கிளாமர் பாடல்கள் என்றால் ஒரு கொண்டாட்டம்தான். கொண்டாட்டமாக மட்டுமே அந்த மாதிரி பாடல்களை பார்க்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.