திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஆபாச படத்தை தோழிகளுடன் சேர்ந்து பார்த்தேன்" பேட்டியில் உண்மையை உடைத்து பேசிய தமன்னா.!?
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்தார்.
தனது நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தமன்னா, தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தமிழில் தொடர் தோல்வி அடைந்து வந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதளவில் வரவில்லை.
இது போன்ற நிலையில் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி சினிமாவில் கவனம் செலுத்திய தமன்னா 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகவும் ஆபாசமாக இருந்ததால் பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும் இப்படத்தில் நடிக்கும் போது சக நடிகரான விஜய் வர்மாவை காதலித்துள்ளார். இதுகுறித்து தமன்னாவே பேட்டியில் பேசியிருக்கிறார்.
தற்போது சமீபத்தில் தமன்னா கலந்து கொண்ட பேட்டியில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது, "சிறுவயதில் தோழிகளுடன் அவர்கள் வீட்டிற்கு படம் பார்க்க சென்றேன். அந்த படங்கள் சீடியில் ஆபாச பட சிடியும் இருந்துள்ளது. வேறு வழியின்றி ஆபாச படத்தை தோழியுடன் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினேன்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.