மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வா நூ காவலையா..." ஜெயிலர் திரைப்படப் பாடலுக்கு இன்ஸ்ட்டாவில் தமன்னாவின் அசத்தலான டான்ஸ் வீடியோ.!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடனும் இளம் கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
சில காலம் தமிழ் சினிமா பக்கம் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பதை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
அனிருத்தின் துள்ளலான இசையில் கபானா எனத் தொடங்கும் அந்த பாடல் நேற்று வெளியானதிலிருந்து இன்றுவரை ஒரு நாளில் மட்டும் யூட்யூபில் 14 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்தப் பாடலில் தமன்னாவின் துள்ளலான கவர்ச்சி நடனமும் சூப்பர் ஸ்டார் இன் ஸ்டைலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கின்றன.
நேற்றைய பாடலில் தமன்னாவின் ஆட்டத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் பாடலின் நடனத்தை ரீல்ஸாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. இதனை ரசிகர்கள் ஏக போகமாக ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.