மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. பிரபல தமிழ் நடிகருக்கு இப்படி ஒரு நிலையா?.. தாயை நினைத்து கண்ணீர் மல்க உருகும் பதிவு..!!
தமிழில் வல்லவன், அயன், பையா, கோ, அம்புலி, மரியான், என்றென்றும் புன்னகை, அனேகன் உட்பட பல படங்களில் கதாநாயகர்களின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஜெகன்.
இவர் விஜய், சன், ஜீ தமிழ் உட்பட பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்வுகளை தொகுத்தும் வழங்கியுள்ளார். இந்நிலையில், இவரின் தாயாருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ள்ள நடிகர் ஜெகன், "என் தாய் சேயாகிறாள். உடல் நலம் குறைந்நு, எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள், எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள் இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்..
இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன்.. உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன்" என கூறியுள்ளார்.