#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் திரையுலகில் பிலிம் பேர் விருதுகளை பெற்றவர்கள் யார் யாரென தெரியுமா?.. லிஸ்ட் இதோ.!
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் 67வது பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இவ்விழாவால் திரையுலகினர் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். தங்களின் படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் மகிழ்ச்சியில் பலரும் தங்களின் இன்பத்தை வெள்ளிப்படுத்துவார்கள். நடப்பு ஆண்டுக்கான தமிழ் நடிகர்கள் & நடிகைகள் பெற்ற விருதுகளின் பட்டியலாவது,
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று),
சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்),
சிறந்த படம் - ஜெய் பீம்
சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா (சூரரை போற்று),
சிறந்த துணை நடிகர் - பசுபதி (சார்பட்டா பரம்பரை),
சிறந்த துணை நடிகை - ஊர்வசி (சூரரைப்போற்று),
சிறந்த இசைத்தொகுப்பு - ஜிவி பிரகாஷ் (சூரரைப்போற்று).