திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல.. நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துகள்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் கடந்த 1970-ஆம் ஆண்டு சென்னையில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தனது 14 வயதிலேயே சினிமா வாழ்க்கையில் அறிமுகமானார்.
கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இப்படத்தில் நடித்தபோது இவர் 8-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களில் கேப்டன் பிரபாகரன், ராஜராஜேஸ்வரி, ராஜகாளியம்மன், நாகேஸ்வரி, படையப்பா, பாகுபலிபோன்ற படங்கள் ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெற்றதாகும். அதிலும் இவர் நடித்த படையப்பா மற்றும் பாகுபலியில் வந்த சில வசனங்கள் தற்போதும் பேசப்பட்டு வருகிறது.
வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல, இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம் என்ற இரண்டு வசனங்களும் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003, ஜூன் 12-ல் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அத்துடன் இவர் தனது அசத்தலான நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். இந்த நிலையில் இன்று நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் தங்களது தெரிவித்து வருகின்றனர்.