அட கொடுமையே... 16 வயசு பொண்ணுக்கு பாலியல் தொல்லை.!! தமிழாசிரியர் கைது.!!
சேலம் மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்காலிக ஆசிரியர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழாசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
சிறப்பு வகுப்பில் பாலியல் சீண்டல்
இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் சிறப்பு வகுப்பிற்கு வந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார் ஆசிரியர் பிரகதீஸ்வரன். மேலும் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!
காவல்துறையில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டிற்கு சென்ற பின்பு தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரகதீஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பிறகு தமிழாசிரியர் பிரகதீஸ்வரன் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் எடப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: போதையில் ஓரின சேர்க்கை... அரசு பணியாளரிடம் பணம் பறிப்பு.!! கல்லூரி மாணவர்கள் கைது.!!