மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகள்.! யார் யாருக்கெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது பார்த்தீங்களா.! முழு லிஸ்ட் இதோ!!
தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட, சின்னத்திரை தொடர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இடையில் சில வருடங்கள் அது தடைபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் விருதுகள் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் 2009 முதல் 2014 ஆம் வருடங்கள் வரை உள்ள திரைப்படங்கள் வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசுக்கான காசோலையும் சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படவுள்ளது.
அதனை போலவே சின்னத்திரை விருதுகள் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் வருடம் வரை ஒளிபரப்பான தொடர்கள் வாரியாக வழங்கப்படவுள்ளது. சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு ரொக்க பரிசும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் விருது பெறும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் குறித்த பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது. அவை இதோ..