மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HBDMaheshBabu: பால்நிறம் கொண்ட பச்ச மண்ணு, பொண்ணுங்களோட கனவு கண்ணன் மகேஷ் பாபுவுக்கு இன்று பிறந்தநாள்..!
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாராகவும், திரையுலகை கடந்த பல பெண்களின் "கிரஷ்" மற்றும் "கனவுக்கண்ணனாக" இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா - இந்திரா தம்பதிக்கு பிறந்தவராவார்.
தனது இளம் வயதுபடிப்பை சென்னையிலேயே நிறைவு செய்த மகேஷ் பாபு, லயோலா கல்லூரியில் பட்டம் படித்தார். நடிகர் கார்த்தி, விஜய் ஆகியோர் இவரின் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். கார்த்திக் இவரின் பள்ளி நண்பர் மற்றும் விஜய் இவரின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005-ஆம் வருடம் நடிகை நம்ரதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் மகேஷ் பாபு, கடந்த 1979-ல் நீடா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். "ராஜ குமருடு" என்ற படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு, திரைப்பட தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் பிற மொழிகளில் அதாவது தமிழ் மொழியில் டப்பிங் வேண்டுமென்றால், அந்த டப்பிங்கிற்கு இவரே தனது குரலை பதிவு செய்கிறார்.
மேலும் தனது வாழ்நாளில் தெலுங்கு திரையுலகில் பல விருதுகளை குவித்த நடிகர் என்ற பெருமையையும் மகேஷ் பாபு பெறுகிறார். அந்த வகையில் 8 நந்தி அவார்ட்ஸ், 5 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ், 4 சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள், 3 சினிமா அவார்ட்ஸ், 1 ஐபா உற்சவம் அவார்ட் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராகவும், நாயகனாகவும் திகழும் மகேஷ்பாபுவிற்கு பிறந்தநாள் என்பதால் பலரும் தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.