"எங்க புள்ள மேல கை வைப்பியா.." பூட்டி வைத்து ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்.!! காவல்துறை குவிப்பு.!!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பள்ளி ஆசிரியரை தாக்கியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மாணவிக்கு பாலியல் தொல்லை
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள மீனவ கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இளஞ்செழியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆசிரியரை பூட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றாக திரண்டு வந்து பள்ளியை ஆக்கிரமித்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இளஞ்செழியனை வகுப்பறையில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் பள்ளியில் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவியது.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!
காவல்துறை விசாரணை
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியரை மீட்டனர். மேலும் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்தது தொடர்பாக அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!