குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தல அஜித் நடித்த டிவி சீரியல் பாத்துருக்கீங்களா? தல அப்போவே செம மாஸ்! வீடியோ இதோ!
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த புகழின் உச்சத்திற்கு வளர்ந்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். அமராவதி என்ற திரைப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த அஜித் எத்தனையோ வெற்றிப்படங்கள், தோல்வி படங்களை கடந்து இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
இந்த வருடம் அஜித் நடித்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அடுத்ததாக வலிமை படத்தில் நடிக்க தயாராகிவருகிறார் அஜித். வெள்ளித்திரையில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தூர்தர்சன் தொலைக்காட்சியில் அவர் நடித்த சீரியல் பற்றி யாருக்காவது தெரியுமா?
தூர்சான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் சீரியல் ஒன்றில் அஜித் நடித்துள்ளார். பைக் ரேஸரான அஜித் இந்த சீரியலிலும் பைக் ஓட்டி தனது காதலியை திருமணம் செய்துகொள்வதுபோல் காட்சி அமைந்துள்ளது. அஜித் நடித்த அந்த சீரியல் காட்சி இதோ.