மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#30YearsOfAJITHISM: அஜித் ரசிகர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்.. ரசிகர்களை சந்தித்து போட்டோசூட் நடத்திய தல..!
கோலிவுட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்து நிற்கும் முன்னணி நடிகர் தல அஜித். இவர் கடந்த 1993இல் தமிழில் வெளியான "அமராவதி" படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படம் இவருக்கு அந்த அளவிற்கு வெற்றியை தராததை தொடர்ந்து, இவரது தமிழ் உச்சரிப்பும் சரியாக இல்லை என்று பல விமர்சனங்கள் இருந்துவந்தது.
ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத தல அஜித், தனது விடாம முயற்சியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பு திறமையினை நிரூபித்தார். இதுவரையிலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையே அளித்துள்ளது. இவர் ஒவ்வொரு முறையும் விழும்போது அடுத்து எப்படி எழுந்திருக்கலாம் என்று யோசிப்பாரே தவிர, விழுந்ததை நினைத்து கவலைப்பட்டு முடங்கிவிடமாட்டார் என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இவர் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூட் போட்டிக்காக சென்று நான்கு தங்க பதக்கங்களையும், இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்று வந்தார்.
மேலும் அங்கு இவரை திரண்ட ரசிகர்களுக்காக மொட்டை மாடியின் மீது நின்று கையசைத்து சென்றார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தல அஜித், தனது ரசிகர்களுடன் பல மணிநேரம் போட்டோ சூட் நடத்தியபோது, எடுத்த வீடியோ சில நாட்களாக #30YearsOfAJITHISM என்று ஹாஷ் டேக்கில் வைரலாகி வருகிறது.
#AjithKumar 's old fans meet video..❣️ 30 Years in the Industry..🔥 A unique personality with multiple Passion..🌟#3DecadesOfAJITHISM#30YearsOfAJITHISMpic.twitter.com/JqeNw1irZd
— Laxmi Kanth (@iammoviebuff007) August 2, 2022