மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென இணையத்தில் மல்லுக்கட்டும் தல - தளபதி ரசிகர்கள்! ஏன்? எதற்காகனு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்கும் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவ்வப்போது திரையரங்குகள் தொடங்கி சமூக வலைதளங்கள் என இருவர்களது ரசிகர்கள் மத்தியிலும் மோதல்கள் கிளம்பும்.
மேலும் இரு தரப்பினர்களும் எதிரெதிராக உருவாக்கும் ஹேஷ்டாக்குகள் தேசியளவில் டிரெண்ட்டாகும். இந்நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்ததற்கு வரி விலக்கு கேட்ட விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இருவாரத்தில் செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கினர். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கினை வைரலாக்கினர். மேலும் #கடனைஅடைங்கஅஜித் என்ற ஹேஷ்டேக்கினையும் டிரெண்டாக்கி வருகிறார்கள்.