மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று மாலை வெளியாகிறது G.O.A.T படத்தின் 2-வது லுக் போஸ்டர்.. தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டில் டபுள் ட்ரீட்.!!
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரித்து வழங்கும் திரைப்படத்தில், நடிகர் விஜய், பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவனின் இசையில், சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னை, தாய்லாந்து உட்பட பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது.
#TheGOAT2ndLook Today at 6PM 🔥 pic.twitter.com/Xp9rmWjPVn
— Actor Vijay Universe (@ActorVijayUniv) January 1, 2024
எஞ்சிய படப்பணிகளை விரைந்து முடிக்கவும் படக்குழு தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் படத்தின் முதல் பார்வை ஒன்று நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இன்று மாலை ஒரு புதிய போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.