மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதேய்... தளபதி 68 படத்தின் கதை வாரிசு பார்ட் 2 வா.? வருத்தத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாக இணைகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க விஜய் நடிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இத்திரைப்படத்தின் கதை என்ன என்பது போன்ற விஷயங்களை ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். அதன்படி ஒரு செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படத்தில் அப்பா மற்றும் மகனுக்கிடையே இருக்கும் ஈகோவை மையமாக வைத்து நகரும் கதை என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் கதையும் இதுதான் என்பதால் அதே மாதிரியான கதையில் நடிக்கிறாரா தளபதியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் இந்தக் கதை பற்றிய தகவலை வெளியிட்டதிலிருந்து இணையதளத்தில் இந்தத் தகவல் வேகமாக பரவி வருகிறது.