53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"தளபதி to தலைவனாக.."! "ரசிகர் வீசிய மாலை.. அன்போடு அணிந்த விஜய்."!. வைரல் வீடியோ.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் ஒவ்வொரு தளபதி விஜய். இவர் தனது 68 வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'GOAT' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு கட்சியின் கொள்கைகள் குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புதிய அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
அரசியல் பிரவேசத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்புகளில் பிசியான தளபதி பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் 'GOAT' திரைப்படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டார். அரசியல் கட்சி அறிவிக்கப்பட்ட பின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜயை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூறினர். பேருந்தின் மீது ஏறி நின்று கையசைத்து அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார் தளபதி விஜய்.
Massive reception for #ThalapathyVijay after political entry. Fans welcome him with garlands and flowers in Pondicherry. 🔥#TheGreatestOfAllTime pic.twitter.com/IDxNg6EiUG
— George 🍿🎥 (@georgeviews) February 4, 2024
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்த ரசிகர் வீசிய மாலையைப் பிடித்து தனது கழுத்திலும் அணிந்து கொண்டார். மேலும் தன்னை காண வந்து உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.