திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இது ரெஸ்ட் டைம்... துபாய்க்கு கிளம்பிய தளபதி விஜய்... வைரல் வீடியோ.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக இருப்பவர் தளபதி விஜய். இவர் அரசியலுக்கு வர இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியலுக்கு வருவது போன்றே இவரது சமீப கால நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.
தளபதி விஜயின் 67 வது படமான லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் திரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத், மன்சூர் அலி கான் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து இருக்கின்றன.
#ThalapathyVijay spotted at Airport..💥
— VCD (@VCDtweets) July 24, 2023
Man is off to a short vacay & will be back before #Leo Audio launch 🖖pic.twitter.com/z4up1XqJX4
லியோ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காக தளபதி விஜய் துபாய் சென்று இருக்கிறார். இவர் சென்னை ஏர்போட்டில் இருந்து துபாய் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. துபாயில் இருந்து வந்த பின் வெங்கட் பிரபுவின் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.