மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் முகத்தை என்னாலேயே பார்க்க முடியாது., இதுல மக்கள் எங்க? - மனம் திறந்த தளபதி விஜய்..!!
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகராகவும், மக்களின் நாயகனாகவும் வலம் வருபவர்தான் நடிகர் விஜய். இவரை நடிகர் விஜய் என்று அழைப்பதை விட தளபதி என்று ரசிகர்கள் அழைத்து மகிழ்வர். இதுவரையிலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை அளித்துள்ளது.
சில படங்களில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் என் தலைவனின் படம் எனக் கூறி ரசிகர்கள் பார்ப்பர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் "வாரிசு" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் விஜய் தனது அடுத்த படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுவரையிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகள் மற்றும் தோற்றத்தில் விஜய் நடிப்பதை தவிர்த்து வந்தார். இது குறித்து அவரிடம் வித்தியாசமான கெட்டப்பில் உங்களை பார்க்கவே முடியவில்லை? என்று கேட்டபோது, "அதுபோன்ற தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து நானே பார்த்துக்கொள்வேன் என்றும், அதை என்னாலே பார்க்க முடியாது. எப்படி மக்கள் பார்ப்பார்கள்.
அதனால் தான் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். மேலும் நேஷனல் அவார்டு படங்களில் நடித்து அவார்டு வாங்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கா? என்று கேட்க, அது போன்ற படங்களை பார்ப்பதற்கு மட்டும் ஆசைப்படுவேன். ஆனால் நடிக்கும் போது, அது போன்ற எண்ணங்களில் நடிப்பதில்லை என்று ஆணித்தனமாக கூறியுள்ளார்.