மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவியில் ஆரம்பமாகும் புதிய சீரியல்! கியூட்டாக ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்!! வீடியோவை பார்த்தீங்களா!!
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சன் டிவி தொடர்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. மேலும் சன் தொலைக்காட்சியிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் சன் டிவியில் ஒரு புதிய அத்தியாயமாக "தாலாட்டு" என்ற தொடர் ஆரம்பமாக உள்ளது. இதில் விஜய் என்ற கதாபாத்திரத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் கிருஷ்ணா நடிக்கிறார். மேலும் அவருக்கு மனைவியாக தென்றல், அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் நடிக்கிறார்.
அம்மாவோட அரவணைப்புன்னா என்னன்னே தெரியாத விஜய்க்கு
— Sun TV (@SunTV) April 14, 2021
அம்மாவோட பாசம் கிடைக்குமா?
தாலாட்டு - விரைவில்... #SunTV #Thalattu #ThalattuOnSunTV pic.twitter.com/3HTXrQwcaj
தாலாட்டு என பெயரிடப்பட்டுள்ள இத்தொடர் முழுவதும் தாய் பாசத்தை மையமாகக் கொண்ட கதை என கூறப்படுகிறது. மேலும் இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.