அம்பானி மகன் திருமணத்தில் கண்ணாடி போல் மிளிரிய தமன்னா! கண்கவரும் புகைப்படம்



Thamana in ambani son marriage photos

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவிற்கும் மும்பை ஜியோ சென்டரில் கடந்த 10 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் திருமணம் நடைபெற்றது.

திருவிழாவைப்போல் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல மொழி திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் முக்கிய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Thamana

பல பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரது கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தவர் நடிகை தமன்னா. சிகப்பு நிற மிளிரும் உடையில் கலந்துகொண்ட தமன்னா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.