மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இவரா?? இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார்னு பார்த்தீங்களா! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ராஜு, சிபி, அமீர், நிரூப், பாவணி,ராஜு, பிரியங்கா, தாமரை ஆகியோர் மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபி பிக்பாஸ் கொடுத்த 12 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலர் நல்ல முடிவு என அவருக்கு வாழ்த்து கூறினர்.
இந்த நிலையில் இந்த வாரம் இறுதியான இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அனைத்து டாஸ்க்குகளையும் மிகவும் சிறப்பாக விளையாடி, கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்த தாமரை வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சண்டை, வாக்குவாதங்கள், அன்பு என பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.