திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு அசத்தலான பரிசு கொடுத்த நடிகர் தனுஷ்..! என்ன பரிசு தெரியுமா.? வைரல் வீடியோ இதோ.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டு விளங்குபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது உடல்வாகுவை சிறிதும் பொருட்படுத்தாத யோகிபாபு எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடிக்கக்கூடியவர்.
பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும், நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று நடித்துவந்த யோகிபாபுவிற்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் அவர்களது குலதெய்வ கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.
மேலும், யோகி பாபுவின் திருமண வரவேற்பு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல்முறையாக தனுஷுடன் இணைந்து யோகிபாபு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும்நிலையில் திருமணத்திற்கு பிறகு யோகிபாபு அதில் கலந்துகொண்டுள்ளார். இன்று ஷூட்டிங்கில் யோகி பாபுவுக்கு தனுஷ் தங்க செயினை திருமண பரிசாக கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.