திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. செம கெத்தாக மாஸ் காட்டுறாரே! தனுஷ் செய்த தரமான சம்பவம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனுஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என பல மொழி படங்களிலும் அசத்தி வருகிறார்.
மேலும் நடிகர் தனுஷ் தற்போது ஜவஹர் மித்ரனின் திருச்சிற்றம்பலம், செல்வராகவனின் நானே வருவேன், வாத்தி, பை-லிங்குவல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவரது கைவசம் மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் ஆகியோரது இயக்கங்களில் அடுத்தடுத்தாக படங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Naane varuven ! pic.twitter.com/qL54CjPpLj
— Dhanush (@dhanushkraja) March 25, 2022